Friday, 10 April 2015

 மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக் கலாசாரத்தைபிரதி­பலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

 சிறந்த மதிய உணவகம்..!

 1- சந்திரன் மெஸ்,
 தல்லாகுளம்
 ( அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்,நாட்டுக்­கோழி )

 2- குமார் மெஸ்,
 தல்லாகுளம்
 ( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )

 3- அம்மா மெஸ்,
 தல்லாகுளம்
 ( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா )

 4- அன்பகம் மெஸ்,
 வடக்குவெளி வீதி
 ( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )

 5- அருளானந்தர் மெஸ்,
 விளக்குத்தூண்
 ( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )
 மற்ற சிறந்த மதிய உணவகங்கள் -
 அம்சவல்லி - கீழவாசல் - மட்டன் பிரியாணி
 பனமரத்து பிரியாணி கடை - புலாவ் போன்ற பிரியாணி
 சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் - மட்டன் பிரியாணி
 ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு
 திண்டுக்கல் வேலு பிரியாணி - மட்டன் பிரியாணி

 சிறந்த மாலை நேர உணவகம்..!

 1- கோனார் மெஸ்,
 சிம்மக்கல்
 ( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு,
 மூளை ரோஸ்ட்,நெஞ்சுகற­ி,இடியாப்பம் பாயா )

 2- குமார் மெஸ்,
 தல்லாகுளம்,மாட்­டுத்தாவணி,பெரியார்
 ( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்­மீன் குழம்பு )

 3- ஆறுமுகம் பரோட்டா கடை,
 தல்லாகுளம்
 ( பரோட்டா,சுவரொட்­டி,குடல் வறுவல்,தலைக்கறி­,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)

 4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர் மஹால்
 கோரிப்பாளையம்
 ( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )

 5- சிங்கம் பரோட்டா கடை
 பீபீ குளம்
 ( முட்டை பரோட்டா,பரோட்டா­,முழுக்கோழி வறுவல் )

 சிறந்த மாலை உணவகங்கள்..!

 ஜானகிராமன் மெஸ்- திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
 சுதா பை நைட் - ரிசர்வ் லைன் ( முட்டை பரோட்டா )
 டாஜ்- டவுன்ஹால் ரோடு ( கிங் பரோட்டா,பட்டர் சிக்கன் )
 பஞ்சாபி தாபா - தல்லாகுளம் ( பட்டர் நான், தந்தூரி சிக்கன் )
 பரோட்டா கடை - ஆவின் சிக்னல் ( மதுரையின் சிறந்த பரோட்டா )
 போஸ் கடை- அண்ணா பஸ் ஸ்டாண்ட் ( பகலில் கறிக்கடை,இரவில்­ இட்லி கடை )

 சிறந்த சைவ உணவகங்கள் மதிய உணவு..! 

 கணேஷ் மெஸ், மேலபெருமாள் மேஸ்திரி ரோடு ( புல் மீல்ஸ் )
 மாலை டிபன் -
 மாடர்ன் ரெஸ்டாரென்ட் ( தோசை,வடக்கிந்தி­ய உணவு வகைகள் )
 எந்நேரமும்
 சபரீஸ், டவுன்ஹால் ரோடு ( நெய் பொங்கல், முஷ்ரூம் பிரியாணி,பன் அல்வா )

 இவை அனைத்தையும் விட மதுரையின் சைவ மாலை நேர உணவகங்களின் முன்னோடி -

 முருகன் இட்லி கடை,
 இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில்
 ( இட்லி,இட்லி, இட்லி...
 உலகின் மிகச்சிறந்த இட்லி )

 மதுரையின் தனிப்பட்ட சிறப்பு சுவைகள் -

 திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை,
 டவுன்ஹால் ரோடு,தங்க ரீகல் எதிரில் - அல்வா
 ( என்னைப்பொறுத்தவ­ரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட சிறந்தது )

 சங்கர் காபி,
 அண்ணா பஸ் ஸ்டாண்ட்- உழுந்த வடை

 ஐயப்பா தோசை கடை,
 இடம் பாண்டிய வெள்ளாளர் தெரு,பெரியார் பஸ் ஸ்டான்ட் அருகில் , ஆர்த்தி ஹோட்டல் ரோட்டில் சென்று இடப்புறம் செல்லவேண்டும் -
 பால்கோவா தோசை,முஷ்ரூம் தோசை,காலி ப்ளவர் தோசை....

 விசாலம் காபி-
 கோரிப்பாளையம் , தல்லாகுளம்.
 - காபி, "கஞ்சா" காபி என்றழைக்கும் அளவு மீண்டும் மீண்டும் பருக தூண்டுவது

 பெயர் தெரியாத அந்த இளநீர் சர்பத் கடை,
 மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே - இளநீர் சர்பத்.

 இவை அனைத்தையும் விட
 மதுரையின் பிரத்தியேக குளிர்பான சுவைக்கு...
 பேமஸ் ஜிகர்தண்டா,
 விளக்குத்தூண்- ஜில்ஜில் ஜிகர்தண்டா.
யானைக்கல்  ராஜேஸ்வரி ஈவினிங்  மட்டன்  ஸ்டால்  (வெங்காய  குடல்  )
 மாமதுரை போற்றுவோம்.
 மணமிக்க மதுரை உணவின் சுவை
 உலகெங்கும் புகழ் பரப்புவோம்...

No comments:

Post a Comment